ரூ.1 கோடி செலவில் இசை வெளியீட்டு விழா. பாஹுபாலி இயக்குனரின் மெகா திட்டம்

bahubaliதெலுங்கு திரையுலகின் பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி சுமார் ரூ.175 கோடியில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாக்கி வரும் திரைப்படம் ’பாஹூபலி’. இந்த படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியையும் மிகவும் பிரமாண்டமாக ரூ.1 கோடி செலவில் நடத்த அவர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மே 31-ஆம் தேதி ஐதராபாதில் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் பிரபல தென்னிந்திய நட்சத்திரங்கள் பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

வரலாற்றுத் திரைப்படமாக உருவாகியிருக்கும்  ’பாஹூபலி’ திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளதாகவும், படத்தின் இரண்டாவது வரும் 2016ஆம் ஆண்டில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

ஆரம்பம் முதலே படத்தின் இசை வெளியீடு பிரம்மாண்டமாக இருக்க வேண்டும் என்பதே இயக்குநர் ராஜமவுலியின் உறுதியாக இருந்ததாகவும், அவர் நினைத்தது போலவே தற்போது நடைபெறவுள்ளதாகவும், படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

பிரபாஸ், ராணா, அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன், சுதீப், சத்யராஜ், நாசர் உள்ளிட்டோர் நடித்துள்ள பாஹூபலி திரைப்படத்திற்கு எம்.எம்.கீரவாணி இசையமைத்துள்ளார். பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹார், ஏற்கனவே படத்தின் இந்தி டப்பிங் வெளியீட்டு உரிமையை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தககது.

Leave a Reply