சீனிவாசப் பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம்!

Singapore-Sri-Srinivasa-Pavithrotsavam-2013_11

புதுச்சேரி: வன்னிய பெருமாள் கோவிலில், சீனிவாசப் பெருமாள்-அலர்மேல்மங்கை தாயார் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. முதலியார்பேட்டையில் உள்ள, வன்னிய பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா, கடந்த 6ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. சுவாமிக்கு தினமும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், வீதியுலாவும் நடந்து வருகிறது. சீனிவாசப்பெருமாள்-அலர்மேல்மங்கைதாயார் திருக்கல்யாண உற்சவம் நேற்று முன்தினம் நடந்தது. காலை 10:00 மணிக்கு, திருமஞ்சனம், மாலை 6:00 மணிக்கு, சீர்வரிசை எடுத்து வருதல், 7:00 மணிக்கு, மாலை மாற்றுதல், 7.30 மணிக்கு, ஊஞ்சல், நலங்கு வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதைதொடர்ந்து, இரவு 8.30 மணிக்கு, திருக்கல்யாணம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை, கோவில் தனி அதிகாரி சீனுவாசன், திருப்பணி மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.

Leave a Reply