மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தேர்தல் ஆணையத்திடம் தன்னுடைய கல்வித் தகுதி குறித்து தவறான தகவல்களை தந்துள்ளதாக குற்றம் சாட்டி அஹ்மர் கான் என்பவர் டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கைத் தொடுத்த அஹ்மர் கான் மற்றும் அவருடைய வழக்கறிஞர்கள் யாரும் நீதிமன்றத்திற்கு வரவில்ல்லை.
இந்த வழக்கின் இன்னொரு வழக்கறிஞர் அஹ்மர் கானுக்காக ஆஜராகி, “ஓர் அவசர வேலையாக அஹ்மர் கான் வெளியூர் சென்றிருப்பதாகவும், இந்த வழக்கின் முக்கிய வழக்கறிஞரும் ஊரில் இல்லை என்றும் கூறிய அவர் இவர்கள் இருவரும் இந்த வழக்கில் நேரடியாக ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்” என்று நீதிபதியிடம் கோரிக்கை விடுத்தார்.
அவருடைய கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் மனுதாரருக்கு ரூ.1000 அபராதமாக விதித்து, நேற்று ஒரு நாள் மட்டும் அவர்களுக்கு விலக்கு அளித்தது. தொடர்ந்து இந்த வழக்கை ஜூன் 1ம தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்தது