நேற்று நடைபெற்ற ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் ஐதராபாத் அணியின் முன்னணி வீரர் செய்த ஒரு சிறிய தவறால் பெங்களூர் அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.
நேற்று நடைபெற்ற போட்டி மழை காரணமாக தாமதமாக தொடங்கியது. 11 ஓவர் போட்டியாக மாற்றப்பட்ட இந்த போட்டியில் ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது. வார்னர், ஹென்ரிகியூஸ் ஆகியோர்களின் அதிரடியால் ஐதராபாத் 11 ஓவர்களில் 135 ரன்கள் எடுத்தது.
136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் பெங்களூர் அணி களத்தில் இறங்கவுள்ள நிலையில் மீண்டும் மழை பெய்ததால் 6 ஓவரில் 81 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது.
இருப்பினும் கெய்லே மற்றும் விராத்கோஹ்லி அதிரடியாக விளையாடினார். கடைசி இரு பந்துகளில் 4 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், அந்த ஒவரின் 5 பந்தை விராத் கோஹ்லி தூக்கி அடித்தார். சிக்ஸ் போகும் என்று எதிர்பார்த்த நிலையில் எல்லை கோட்டு அருகே இருந்த வார்னர் அதை கேட்ச் பிடித்தார். ஆனால் எதிர்பாரத விதமாக கேட்ச் பிடித்த மகிழ்ச்சியில் பவுண்டரி கோட்டை மிதித்துவிட்டார். இதனால் அது சிக்ஸராக அறிவிக்கப்பட்டது. வார்னர் செய்த சிறு தவறால் பெங்களூர் வெற்றி பெற்றது. 44 ரன்கள் எடுத்த கோலி ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
உலகின் மிக சிறந்த பில்டர்களில் ஒருவரான வார்னர், அதீதித மகிழ்ச்சியால் செய்த தவறால் அந்த அணியின் தோல்விக்கு காரணமாக மாறியது ஐதராபாத் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.