சீனாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் ஜப்பான் நாட்டு ஆபாச நடிகை ஒருவரை 15 வருடங்களுக்கு மொத்தமாக வாடகைக்கு எடுத்துள்ளாராம். இதற்காக அவர் செலவு செய்த பணம் 8 மில்லியன் அமெரிக்க டாலர் என்று கூறப்படுகிறது.
நம்மூர் சன்னிலியோனுக்கு சமமான புகழை பெற்றவர் ஜப்பான் நாட்டின் ஆபாச நடிகை ரோலா மிசாகி. சீனாவின் சமூக இணையதளமான ‘வெய்போ’ என்ற இணையதளத்தில் இவரை 4.8 மில்லியன் பேர் ஃபாலோ செய்கின்றனர். இவருடைய புகைப்படங்களும் வீடியோக்களும் ஆயிரக்கணக்கில் இணையதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் சீனாவின் பிரபல தொழிலதிபரும், சினிமா படத்தயாரிப்பாளருமான ஒருவர் ரோலா மிசாகிக்கு 8 மில்லியன் அமெரிக்க டாலர் கொடுத்து தனது பெர்சனல் உதவியாளராக இருக்க 15 வருடங்களுக்கு ஒப்பந்தம் செய்துள்ளாராம். இந்த பதினைந்து வருடங்களில் அவர் எந்த ஒரு ஆபாச படத்திலும் நடிக்க்கூடாது என்றும் அந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட அவரை அந்த தொழிலதிபர் 15 வருடங்களுக்கு வாடகைக்கு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் சீனா மற்றும் ஜப்பானை சேர்ந்த ரோலாவின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.