லக்ஷ்மி நரசிம்மர் கோவிலில் கலசங்களுக்கு பரிகார பூஜை


.[carousel ids=”63349,63350″]

திண்டிவனம்: திண்டிவனம் லக்ஷ்மி நரசிம்மர் கோவிலில் ராஜகோபுர கலசங்களுக்கு பரிகாரபூஜை நடந்தது. திண்டிவனம் லக்ஷ்மி நரசிம்மர் கோவில் ராஜகோபுரத்தில் ஏழு கலசங்கள் உள்ளது. கடந்த ஏப்., 30 ம் தேதி இரவு மர்ம நபர்கள், இதிலிருந்த 3 கலசங்களை திருடிச் சென்றுவிட்டனர். இதையடுத்து நேற்று காலை கோவிலில் பரிகார பூஜைகள் நடந்தது. நேற்று காலை மூலவருக்கு மகா சாந்தி திருமஞ்சனமும், சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து ராஜகோபுர கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. பூஜைகளை சீனுவாச பட்டாச்சாரியார் தலைமையில், கடுக்கூர் ஆதிகேசவ பெருமாள் கோவில் பட்டாச்சாரியர் ஸ்ரீராமன் மற்றும் திண்டிவனம் ரகு, ஸ்ரீதர் உள்ளிட்ட குழுவினர் செய்தனர். திந்திரிணீஸ்வரர் கோவில் அர்ச்சகர் ராதாகுருக்கள், பி.ஆர்.எஸ்., நிறுவன உரிமையாளர்கள் நிர்மலா ரங்கமன்னார், வைஷ்ணவி சரத்சந்தர் மற்றும் பார்த்தசாரதி, ராம் டெக்ஸ் வெங்கடேசன், முன்னாள் ஊராட்சி தலைவர் ரவிச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து வரும் 30ம் தேதி கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றமும், அடுத்த மாதம் 7ம் தேதி தேரோட்டமும் நடக்கிறது

Leave a Reply