நம்மூர் பெண்கள் கரப்பான் பூச்சியை பார்த்தாலே பயந்து நடுங்கும் நிலையில் ஜப்பானில் கரப்பான் பூச்சியை வைத்து ஒரு கேம் ஷோ நடத்தி வருகின்றனர்.
ஜப்பானின் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் இந்த கரப்பான்பூச்சி கேம் ஷோ மிகவும் பிரபலம் அடைந்து வருகிறது. இந்த கேம்ஷோவில் ஒரு கண்ணாடிக்குழாயில் ஒரு உயிருள்ள கரப்பான்பூச்சியை போட்டுவிடுவார்கள்.
இதன் இரு முனைகளிலும் இரு இளம்பெண்கள் வாயால் ஊத வேண்டும். யாராவது ஒருவர் அசந்தாலும் அவரது வாய்க்குள் கரப்பான்பூச்சி போய்விடும். இந்த திகிலூட்டும் கேம்ஷோவிற்கு ஜப்பானில் மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த கேம்ஷோவில் கலந்து கொள்ளவும் ஏராளமான இளம்பெண்கள் ஆர்வத்துடன் வருவதாக கூறப்படுகிறது.
https://www.youtube.com/watch?v=T-gfMKOE_MA