அரவிந்த் கெஜ்ரிவாலின் எதிர்ப்பை மீறிய டெல்லி தலைமை செயலாளர். பெரும் பரபரப்பு

sakunthalaடெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கடும் எதிர்ப்பையும் மீறி மத்திய அரசால் நியமனம் செய்யப்பட்ட சகுந்தலா காமிலின்  தலைமைச் செயலாளராக இன்று பொறுப்பேற்று கொண்டதால் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற டெல்லி சட்டமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக பொறுப்பேற்றிருந்தபோதிலும், அந்த மாநிலத்தின் முக்கிய துறைகளான காவல்துறை போன்ற முக்கிய துறைகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது.

காவல்துறையின் முக்கிய அதிகாரிகள், தலைமைச்செயலாளர் போன்ற பதவிகளுக்கு மத்திய அரசே நேரடியாக அந்த மாநிலத்தில் மட்டும் நியமனம் செய்யும். இந்நிலையில் சமீபத்தில் சகுந்தலா காமிலின் என்பவர் டெல்லியின் தலைமைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டதற்கு அரவிந்த் கெஜ்ரிவால் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

ஆனால் முதல்வர் கெஜ்ரிவாலின் கடும் எதிர்ப்பையும் மீறி தற்காலிக தலைமைச் செயலாளராக சகுந்தலா காம்லின் இன்று பதவியேற்றுக் கொண்டார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள கெஜ்ரிவால், விதிப்படி சகுந்தலாவை துணை நிலை ஆளுநர் நியமனம் செய்யவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார்.

Leave a Reply