தாமரையும், இலையும் படரும் நேரத்தில் மேல்முறையீடு அபசகுனமோ? டுவிட்டரில் ராம்தாஸ்

ramdossஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என தமிழகத்தின் அனைத்து எதிர்க்கட்சிகளும் கர்நாடக அரசை வலியுறுத்தி வரும் நிலையில், “ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு செய்யக்கூடாது என்று பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார். இது குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், ‘தாமரையும், இலையும் படரும் நேரத்தில் மேல்முறையீடு அபசகுனமோ?’ என்று கேள்வி எழு[ப்பி உள்ளார்.
 
சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக அரசு கண்டிப்பாக மேல்முறையீடு செய்ய வேண்டும் என பாமக மிக தீவிரமாக உள்ளது. இதற்காக கர்நாடக அமைச்சர்களை நேரில் சந்தித்தும் அந்த கட்சியின் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் இதுகுறித்து டுவிட்டரின் இன்று தெரிவித்த கருத்துக்கள் இதோ:

ஊழல் வழக்கில் அஜய் சவுதாலாவுக்கு பிணை வழங்க உச்ச நீதிமன்றம் மறுப்பு: உடனடியாக பிணை கிடைக்க அவர் என்ன ஜெயலலிதாவா?

ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு செய்யக்கூடாது: இல.கணேசன் – தாமரையும், இலையும் படரும் நேரத்தில் மேல்முறையீடு அபசகுனமோ?

விவசாயத்திலிருந்து வேறு தொழிலுக்கு மாறும் தமிழக உழவர்கள்: இந்தியாவின் முதுகெலும்பு உடைவதை இனியாவது அரசுகள் உணர வேண்டும்

Leave a Reply