டிரைவிங் லைசென்ஸ் பெற லஞ்சம் கொடுக்க முயன்றாரா டெல்லி முதல்வர் மகள். பெரும் பரபரப்பு

delhi cmசமீபத்தில் டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மகள் டிரைவிங் லைசென்ஸ் பெறுவதற்காக சென்றபோது லஞ்சம் கொடுக்க முயன்றதாக வெளிவந்த செய்தி அப்பகுதியை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மகள் ஹர்ஷிதா சமீபத்தில்  டெல்லி ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு பழகுநர் உரிமம் (LLR.) பெறுவதற்காக சென்றிருந்தார். அனைவரையும் போல வரிசையில் நின்ற அவர், தனது முறை வந்தபோது தனது விண்ணப்பத்தை அதிகாரியிடம் கொடுத்தார். அந்த விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய ஒரு ஆவணம் இல்லாததால் அதிகாரி அந்த விண்ணப்பத்தை தள்ளுபடி செய்துள்ளார்.

ஆனால் தன்னிடம் அந்த ஆவணம் இல்லையென்றும், தனக்கு உடனடியாக லைசென்ஸ் தேவைப்படுவதால் எவ்வளவு பணம் கேட்டாலும் கொடுப்பதாக கூறினார். ஆனால் அந்த அதிகாரி நல்ல வேளையாக பணம் வாங்க மறுத்து உரிய ஆவணத்துடன் வருமாறு அறிவுரை கூறி அனுப்பிவிட்டாராம்.

இந்த தகவலை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியின் புறநகர் பகுதியான புராரி அருகே ஆட்டோ ரிக்‌ஷா டிரைவர்கள் மத்தியில் பேசியபோது தெரிவித்துள்ளார். ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்த பின்னர் டெல்லியில் உள்ள அரசு அலுவலகங்களில் பணியாற்றும் ஊழல் அதிகாரிகள் லஞ்சம் வாங்க பயப்படுவதாகவும், நேர்மையான அதிகாரிகள் தங்களது கடமைகளை தைரியமாக செய்து கொண்டிருக்கிறார்கள் என்றும் கெஜ்ரிவால் பெருமையுடன் குறிப்பிட்டார்.

Leave a Reply