சேலை கட்டும் அர்ச்சகர்!

hqdefault

உலக அன்னையான அம்பாள் காஞ்சிபுரத்தில் காமாட்சியாகவும், திருச்சி அருகிலுள்ள திருவானைக்காவலில் அகிலாண்டேஸ்வரியாகவும் இருந்து உயிர்களின் நன்மைக்காக சிவனை பூஜிக்கிறாள். அம்பிகை செய்யும் பூஜையின் பலன் அவளுக்காக அல்ல. உயிர்களாகிய ஜீவனுக்கே என்கிறது ஆகமம். சுவாமி! தாங்கள் உபதேசித்த சிவாகம அடிப்படையில் உங்களைப் பூஜிக்க ஆவல் என்னுள் பொங்குகிறது, என்று அம்பிகையே சிவனிடம் தன் விருப்பத்தை சொன்னதாக பெரியபுராணம் கூறுகிறது. தினமும் உச்சிக்கால பூஜையில் அகிலாண்டேஸ்வரி சிவனைப் பூஜிப்பதாக ஐதீகம். இதற்காக இங்குள்ள அர்ச்சகர் சேலை உடுத்திக் கொண்டு சுவாமி சந்நிதிக்கு பூஜைக்கு செல்வார்.

Leave a Reply