தேவையான பொருட்கள்:
சிக்கன் – 1/2 கிலோ
பெரிய வெங்காயம் – 1
பூண்டு – 10 பற்கள் (பொடியாக நறுக்கியது)
இஞ்சி – 1 இன்ச் (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் – 8 (அரைத்தது)
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
அரைப்பதற்கு…
பட்டை – 2
கிராம்பு – 4
மல்லி – 1 டேபிள் ஸ்பூன்
வெந்தயம் – 1/4 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
சோம்பு – 1/2 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவி, நீரை வடித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் மிக்ஸியில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை போட்டு அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும். பிறகு அதில் சிக்கனை போட்டு சிறிது நேரம் வதக்கி, பின் பச்சை மிளகாய் பேஸ்ட் சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும். பின் அதில் பூண்டு, இஞ்சி சேர்த்து வதக்கி, உப்பு தூவி, அரைத்து வைத்துள்ள பொடி சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து சிக்கனை வேக வைக்க வேண்டும். சிக்கன் நன்கு வெந்து, தண்ணீர் வற்றியதும், அதனை இறக்கி பரிமாறினால், காக்கிநாடா சிக்கன் ட்ரை ப்ரை ரெடி!!!