கேரளா சர்ச்சில் நயன்தாரா ரகசிய திருமணம்? கோலிவுட்டில் பரபரப்பு

nayantharaஅய்யா’ படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக அறிமுகமான நயன்தாரா, கடந்த பல வருடங்களாக தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் நம்பர் ஒன் நடிகையாக திகழ்ந்து வருகிறார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய், அஜீத், போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பல வெற்றிப்படங்களை கொடுத்த நயன்தாரா, சொந்த வாழ்க்கையில் இருமுறை காதல் தோல்வியை சந்தித்துள்ளார். சிம்பு, மற்றும் பிரபுதேவா ஆகிய இருவரையும் காதலித்து பின்னர் அவர்களுடன் பிரேக் அப் ஆன பின்னர் நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த நயன்தாரா, சமீபத்தில் ஒரு இயக்குனரை காதலித்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்நிலையில் அந்த இயக்குனருடன் கேரளாவில் உள்ள கொச்சி சர்ச் ஒன்றில் ரகசிய திருமணம் ஆகிவிட்டதாகவும், இந்த திருமணம் கடுமையான பாதுகாப்புடன் மிக நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

நயன்தாராவை திருமணம் செய்த அந்த இயக்குனர் விக்னேஷ் சிவன் என்றும், தற்போது நயன்தாரா நடித்து வரும் ‘நானும் ரவுடிதான்’ என்ற படத்தை இயக்கி வருபவர் என்றும் கோலிவுட்டில் கூறப்படுகிறது. தனது கணவருக்கு நயன்தாரா கார் ஒன்றை பரிசளித்துள்ளதாகவும், நயன்தாரா கையில் உள்ள படங்களை முடித்துவிட்டு சினிமாவில் இருந்து விலகுவார் என்றும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

Leave a Reply