சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையான அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வர் பதவியை வரும் 22ஆம்தேதி ஏற்றுக்கொள்வார் என அதிமுக வட்டாரங்கள் உறுதியாக கூறி வருகின்றன.
வரும் 22ஆம் தேதி அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் காலை 7 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
அன்றைய தினம் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் முடிந்த பின்னர் முதலமைச்சர் பன்னீர்செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்வார் என்றும், சட்டப்பேரவை கட்சித் தலைவராக ஜெயலலிதா தேர்வு செய்யப்பட்டதற்கான கடிதத்தையும், புதிய அமைச்சரவை பட்டியலையும் அன்றே ஜெயலலிதா ஆளுநர் ரோசய்யா அவர்களிடம் அளிப்பார் என்றும் கூறப்படுகிறது.
அன்றைய தினத்தில் காலை 9.30 முதல் 10.30 மணி வரை நல்ல நேரம் இருப்பதால் அந்த நேரத்தில் ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றுக் கொள்வார் என்றும் அவருடன் புதிய அமைச்சர்களும் பதவி ஏற்றுக் கொள்வார்கள் என்றும் அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.
பதவி ஏற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றாது. முதல்வராக பதவியேற்றதும் அன்று பிற்பகல் 12 மணிக்கு மேல் தலைமைச் செயலகத்துக்கு ஜெயலலிதா வர வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.