ஸ்ரீவி., வடபத்ரசயனர் கோயிலில் கும்பாபிஷேக யாகசாலை பூஜை!

Sri-Navaneetha-Krishnan-Temple1

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசயனர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று யாகசாலை பூஜை துவங்கியது. காலை எஜமானர் அழைப்பு, ஆச்சாரியர் அழைப்பு நடந்தது. பின்னர் ராப்பத்து மண்டபத்தில் யாகசாலை பூஜை துவங்கியது. மாலை 6 மணிக்கு மேல் அங்குரார்பணம், கும்ப பூஜா,முதல் கால யாகசால உக்த ஹோமம், பூர்ணாஹீதி திருவாராதனம் நடந்தது. விஜயபாஸ்கர பட்டர் தலைமையில் அர்ச்சகர்கள், ஸ்தலத்தர் யாகசாலை பூஜையில் ஈடுபட்டனர். திருக்குறுங்குடி ஜீயர், நாச்சியார் சாரிட்டபிள் டிரஸ்ட் தலைவர் ராமசுப்பிரமணியராஜா, தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் ராமராஜா ஆன்மீகவாதிகள் பங்கேற்றனர். இதை முன்னிட்டு ஆண்டாள் சன்னிதியில், ஆண்டாள், ரெங்கமன்னார் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர். சத்யசாய்பாபா சேவா சமிதியினர் உழவாரப்பணியில் ஈடுபட்டுள்ளனர். அரசு மருத்துவர்கள் நாராயணன், செந்தில்வேலவன் தலைமயில் மருத்துவக்குழு இயங்குகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் டி.எஸ்.பி., முரளிதரன் உத்திரவின் படி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply