திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கடந்த சிலநாட்களாக தனது சகோதரர் மகனின் திருமண அழைப்பிதழை கொடுக்க தமிழகத்தின் முக்கிய தலைவர்களை சந்தித்து வருகிறார். திருமண அழைப்பிதழை கொடுப்பது மட்டுமின்றி அவர் அதிமுகவுக்கு எதிராக ஒரு மெகா கூட்டணியை அமைத்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இதுவரை அவர் விஜய்காந்த், வைகோ, அன்புமணி ராமதாஸ், தமிழிசை செளந்திரராஜன், ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், ஜி.கே.வாசன், ஆகியோர்களை நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழை கொடுத்துவிட்டு அதோடு தற்போதைய அரசியல் நிலவரம் குறித்தும் ஆலோசித்துள்ளார்.
இந்நிலையில் இன்று அவர் பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்களை அவருடைய தைலாபுரம் தோட்டத்தில் நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழை கொடுத்தார்.
தனது இல்லத்துக்கு முதன் முறையாக வந்த ஸ்டாலினை வாசலுக்கே வந்து ராமதாஸ் வரவேற்ற ராமதாஸ், ஸ்டாலினின் அழைப்பை ஏற்று நிச்சயமாக திருமணத்தில் கலந்து கொள்வதாக உறுதியளித்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், “வடநாட்டில் நிலவும் அரசியலுக்கு அப்பாற்பட்ட பண்பாட்டை தமிழகத்தில் கொண்டுவர வேண்டும் என்ற உயரிய நோக்கத்தின் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் தலைவர்களையும் சந்தித்து அழைத்து வருகிறோம்” என்றார்.
தமிழகத்தில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் திமுக போட்டியிடுமா என்ற கேள்விக்கு “முதலில் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் தேதியை அறிவிக்கட்டும். அதன் பின்னர் திமுக உயர்மட்ட குழு கூடி தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவெடுக்கும்” என கூறினார்.
முன்னாள் முதல்வருக்கும் நேரில் திருமண அழைப்பிதழ் கொடுப்பீர்களா என்ற கேள்விக்கு “முன்னாள் முதல்வரா? மக்கள் முதல்வரா? என திருப்பி கேட்டுவிட்டு முதலில் அவர் தன் கட்சிக்காரர்களை சந்திக்கட்டும். பிறகு யோசிக்கலாம்”