ரஷ்ய தலைவர் மனைவியிடம் அநாகரீகமாக நடந்து கொண்டாரா இந்திய அமைச்சர். பெரும் பரபரப்பு

ministerமத்திய, மாநில அமைச்சர்கள் ஒருசிலர் ஏதாவது ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை வேடிக்கையாகவோ அல்லது சீரியஸாகவோ கூறிவிட்டு அதன்பின்னர் வாங்கிக் கட்டிக்கொள்ளும் வழக்கம் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. அந்த வரிசையில் தற்போது சிக்கியிருப்பவர் மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் பாபுலால் கௌர்,

பாரதிய ஜனதா கட்சியின் செயல்வீரர்கள் கூட்டத்தில் சமீபத்தில் கலந்து கொண்ட மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் பாபுலால் கௌர் அந்த கூட்டத்தில் பேசியபோது, “நான் ரஷ்யா சென்ற போது வேட்டி கட்டியிருந்தேன். அதைப் பார்த்த ரஷ்யத் தலைவர் ஒருவரின் மனைவி, இந்த வேட்டியை எப்படி கட்டுகிறீர்கள், இது எப்படி இடுப்பில் நிற்கிறது என்று கேட்டார். அதற்கு பதில் அளித்த நான், “பொது இடத்தில் அது பற்றிக் கூற முடியாது, தனியாக வாருங்கள், எப்படி வேட்டியை கட்டுவது என்று காட்டுகிறேன்” என்று கூறியதாக தெரிவித்தார்.

அமைச்சரின் இந்த பேச்சுக்கு சமூகவலைத்தளங்களிலும், பெண்கள் அமைப்புகளிடம் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது. ஒரு நாட்டு தலைவரின் மனைவியிடம் அமைச்சர் அநாகரீகமாக நடந்துள்ளதாகவும், உடனே அவர் பதவி விலக வேண்டும் என்றும் மத்திய பிரதேச பெண்கள் அமைப்பு ஒன்று போர்க்கொடி தூக்கியுள்ளது.

Leave a Reply