பாட்னா விமான நிலையத்தில் மத்திய அமைச்சரை துணிச்சலுடன் தடுத்து நிறுத்திய பெண்போலீஸ்.

patnaபீகாரில் மத்திய அமைச்சர் ஒருவரை பெண் போலீஸ் ஒருவர் துணிச்சலுடன் தடுத்து நிறுத்திய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விமான நிலையத்தில் வெளியேறு வாசல் வழியாக உள்ளே நுழைய முயன்ற மத்திய அமைச்சர்  ராம் கிருபால் யாதவை பெண் போலீஸ் ஒருவர் தடுத்து நிறுத்தி உள்ளே செல்லும் வழியில் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார். கடமை தவறாத பெண் போலீஸுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.

பிகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் மத்திய ஊரக வளர்ச்சித் துறை இணை அமைச்சர் ராம் கிருபால் யாதவ் நேற்று தலைநகர் பாட்னாவுக்கு வந்த மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயாவை வரவேற்க ஜெயப்பிரகாஷ் நாராயண் சர்வதேச விமான நிலையத்திகு வந்தார்.

அப்போது பயணிகள் வெளியே செல்லும் வாசல் வழியாக அமைச்சர் யாதவ் நுழைய முயன்றபோது அங்கு பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எப்) பெண் போலீஸ் ஒருவர் அமைச்சரை தடுத்து நிறுத்தி விமான நிலையத்தின் உள்ளே செல்லும் வாசல் வழியாக செல்லுமாறு கேட்டுக்கொண்டார். பெண் போலீஸாரின் அறிவுரையை ஏற்று அமைச்சர் யாதவு உள்ளே செல்லும் நுழைவு வாயில் வழியாக சென்றார்.

இதுகுறித்து அமைச்சர் ராம் கிருபால் யாதவ் செய்தியாளர்களிடம் கூறும்போது, “விமான நிலையம் சென்ற நான் அவசரத்தில் தவறுதலாக வெளியேறும் வாயில் வழியாக நுழைய முயன்றேன். பின்னர் பெண் போலீஸ் கேட்டுக்கொண்டதன் பேரில் நுழைவு வாயில் வழியாக சென்றேன். கடமை தவறாத அந்த பெண்ணின் செயல் பாராட்டுக்குரியது” என்றார்

Leave a Reply