அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் உலகின் மிகச் சிறிய ’தியேட்டர்’ கட்டப்பட்டு அந்த தியேட்டர் தற்போது பொது மக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த தியேட்டரில் திரைப்படம் எதுவும் ஓடாது. கலை நிகழ்ச்சிகள், இசை ஆல்பம், அல்லது கதை சொல்லும் நிகழ்வு போன்றவை மட்டுமே நடைபெறும். இந்த தியேட்டர் ஒரு லிப்ட்டின் உள்புறம் அளவே இருக்கும். நான்கடி அகலமும், எட்டடி அகலமும் கொண்ட இந்த தியேட்டரில் ஒரே ஒருவர் மட்டுமே அமர முடியும். மேலும் இந்த தியேட்டரின் உள்புறம் சிவப்பு நிற வெல்வெட் துணிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. உள்ளே ஒலி மற்றும் ஒளியினை சரி செய்யும் ஒருவர் மட்டும் பார்வையாளருடன் இருப்பார்.
இந்த தியேட்டருக்குள் பொதுமக்கள் இலவசமாகவே செல்லலாம். கட்டணம் எதுவும் கிடையாது. ஆனால் இதன் உள்ளே செல்வதற்கு இணையதளம் மூலம் அதிர்ஷ்டசாலியாக தேர்வு செய்யப்பட வேண்டும். இந்த தியேட்டரை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எளிதில் எடுத்து செல்ல முடியும். இந்த தியேட்டருக்கு பொதுமக்களிடம் இருந்து கிடைக்கும் வரவேற்பை அடுத்து வரும் நாட்களில் அமெரிக்காவின் பிற நகரங்களிலும் இதுபோன்ற தியேட்டர்கள் வடிவமைக்கப்பட உள்ளது.
https://www.youtube.com/watch?v=d1OB06z1Lf8