திருமாவளவனின் தனிச்செயலாளர் ஓட ஓட வெட்டிக் கொலை. சென்னையில் பதற்றம்

VIDUTHALAIவிடுதலை சிறுத்தை கட்சித் தலைவர் திருமாவளவனின் தனிச் செயலாளர் வெற்றி செல்வன் இன்று காலை சென்னை அருகேயுள்ள மடிப்பாக்கம் என்ற பகுதியில் பட்டப்பகலில் மர்ம நபர்களால் பயங்கரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் சென்னையில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

விடுதலைச் சிறுத்தைக் கட்சி தலைவர் திருமாவளவனின் தனிச் செயலாளர் வெற்றிச்செல்வன் இன்று காலை 8 மணிக்கு சென்னை மடிப்பாக்கம் கூட்டு ரோட்டில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்தார். அப்போது 8 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று   வெற்றிச்செல்வனை சுற்றிவளைத்து அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களால் அவரை சரமாரியாக வெட்டியது. மர்ம கும்பலிடம் இருந்து தப்பிக்க வெற்றிச்செல்வன் படுகாயத்தையும் பொருட்படுத்தாமல் ஓடினார். ஆனால் மர்ம கும்பல் அவரை தொடர்ந்து விரட்டி மேலும் பல இடங்களில் வெட்டியது. இதனால் ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் வெற்றிச்செல்வன் கீழே விழுந்தார்.

படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த வெற்றி செல்வனை அப்பகுதி மக்கள் மீட்டு உடனடியாக அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த வெற்றிச்செல்வன், மருத்துவர்களின் தீவிர சிகிச்சைக்கு பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த  காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வெற்றி செல்வனை வெட்டி படுகொலை செய்த மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர். சென்னையில் பட்டப்பகலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அக்கட்சியினர் மற்றும் அப்பகுதி மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

Leave a Reply