[carousel ids=”63749,63750,63751,63752,63753,63754,63755″]
பொதுவாக உணவுப்பொருளில் லேசாக மண் ஒட்டியிருந்தாலே நாம் அந்த உணவுப்பொருளை ஒதுக்கிவிடுவோம். ஆனால் உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஒரு பெண் தினமும் ஒரு கிலோ மணலை தனது உணவுடன் கலந்து சாப்பிட்டு வருவதாக அதிசயமான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த சுத்மாதேவி என்ற பெண், விளையாட்டாக பத்து வயதாக இருக்கும்போது தோழிகளுடன் மணலை சாப்பிட்டுள்ளார். பின்னர் அதுவே தினசரி வழக்கமாகிவிட்டதாம். நாம் சர்க்கரையை தொட்டு ஒருசில உணவை சாப்பிடுவது போல இவர் மணலை தொட்டு சாப்பிடுவாராம். சராசரியாக இவர் தினசரி சாப்பிடும் மணலின் எடை சுமார் 1 கிலோ என கூறப்படுகிறது.
தினசரி மணலை சாப்பிட்டாலும் இவரது உடலில் எவ்வித கோளாறும் ஏற்படவில்லை என்பது தான் அதிசயம். இவருக்கு மூன்று ஆண்கள் ஒரு பெண் என நான்கு குழந்தைகள் உள்ளனர். இவரது கணவர் உள்பட இவரது வீட்டில் யாரும் மணலை சாப்பிடுவது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
தினசரி உணவுடன் மணலை கலந்து சாப்பிடும் இவரை அப்பகுதியில் உள்ளவர்கள் மட்டுமின்றி அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.
https://www.youtube.com/watch?v=F28JElDVLZk