ஐ.பி.எல் கிரிக்கெட்: ராஜஸ்தானை வெளியேற்றியது பெங்களூர். நாளை சென்னை vs பெங்களூர்

cricketஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் முக்கிய போட்டியான எலிமினேட்டர் போட்டியில் பெங்களூர் அணி அபார வெற்றி பெற்று ராஜஸ்தான் அணியை வெளியேற்றியது. இதன் மூலம் இறுதிப்போட்டியில் மும்பை அணியுடன் மோதுவது யார் என்று முடிவு செய்யும் போட்டியில் சென்னை மற்றும் பெங்களூர் அணிகள் மோதவுள்ளது.

நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டகாரர்களான கெய்லே மற்றும் விராத் கோஹ்லி 27 மற்றும் 12 ரன்களில் அவுட் ஆகியபோதிலும், அதன் பின்னர் ஜோடி சேர்ந்த டிவில்லியர்ஸ் மற்றும் மந்தீப்சிங் ஜோடி சிறப்பாக விளையாடி வெற்றிக்கு வழிவகுத்தது. டிவில்லியர்ஸ் 66 ரன்களும், மந்தீப் 54 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமலும் இருந்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பெங்களூர் அணி 4 விக்கெட்டுக்களை இழந்து 180 ரன்கள் எடுத்தது.

181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி பெங்களூர் அணியின் அபார பந்துவீச்சுக்கு தாக்குபிடிக்க முடியாமல் 19 ஓவர்களில் 109 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து தோல்வி அடைந்தது. ரஹானே மட்டும் ஓரளவு நிலைத்து ஆடி 42 ரன்கள் எடுத்தார்.

இந்த வெற்றியின் மூலம் பெங்களூர் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை பெற்றுள்ளது. நாளை பெங்களூர் மற்றும் சென்னை அணிகள்  மோதவுள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி கொல்கத்தாவில் நடைபெறும் இறுதிப்போட்டியில் மும்பையுடன் மோதும்

Leave a Reply