8 வயது சிறுமியின் கடிதத்திற்கு மதிப்பளித்து உடனடி உத்தரவு போட்டபிரதமர் மோடி.

girlஆக்ராவை சேர்ந்த ஷூ தயாரிக்கும் கம்பெனியில் தினக்கூலியாக வேலை செய்யும் ஒருவரது 8 வயது மகள் தையாபா. இவர் ஒரு பிறவி இதய நோயாளி. பிறக்கும்போதே இருதய வால்வு குறைபாட்டுடன் பிறந்த இவருக்கு தமனியும் இடம் மாறி இருந்ததால் அடிக்கடி இருமல் மற்றும் ஜலதோஷத்தினால் அவதிப்பட்டு வந்தார். இவரது நோயை குணப்படுத்த ரூ.15 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை செலவாகும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இவரது தந்தையின் வருமானம் குடும்ப செலவிற்கே போதுமானதாக இல்லாத நிலையில் தையாபாவின் சிகிச்சைக்கு பணமின்றி தவித்தனர். இந்நிலையில் சிறுமி தையாபாவிற்கு ஒருநாள் திடீரென ஒரு யோசனை தோன்றியது. தன்னுடைய நிலையையும் தனது குடும்பத்தின் நிலையையும் கடிதமாக எழுதி பிரதமர் மோடிக்கு அனுப்பினார்.

இவரது கடிதத்திற்கு உடனடியாக பலன் கிடைத்தது.  பிரதமர் அலுவலகத்திலிருந்து டெல்லி அரசுக்கு உடனடியாக ஒரு உத்தரவு பறந்தது. அந்த உத்தரவில் சிறுமி தையாபாவுக்கு தேவையான சிகிச்சையை உடனடியாக அளிக்க தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கூறப்பட்டிருந்தது.

சிறுமி தையாபாவுக்கு அளிக்கப்பட வேண்டிய சிகிச்சைக்கான வசதி ஆக்ராவில் இல்லாததால் உடனடியாக தையாபாவின் குடும்பத்தினரை டெல்லி வருமாறு அறிவுறுத்தப்பட்டு தற்போது அவருக்கு சிகிச்சையும் தொடங்கி விட்டது.

சிகிச்சைக்குப் பின்னர் தையாபா  எந்த தொந்தரவும் இல்லாமல்  பூரண குணமடைந்துவிடுவாள் என்றும் அவளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் தெரிவித்துள்ளார். தற்போது 3 ஆம் வகுப்பு படித்து வரும் தையாபாவுக்கு எதிர்காலத்தில் வங்கியில் பணியாற்ற வேண்டும் என்றும், வங்கியில் வேலை செய்தால் தனது குடும்பத்திற்கு தேவையான பணம் கிடைக்கும் என்றும் கூறுகிறாள்.

சிறுமி தையாபாவின் கடிதத்திற்கு மதிப்பளித்து உடனடியாக சிகிச்சைக்கு ஏற்பாடு பிரதமர் மோடிக்கு அவளது பெற்றோர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளனர்.

Leave a Reply