ஜெயலலிதாவுக்கு டி.ராஜேந்தர் எழுதியுள்ள வாழ்த்துக் கவிதை.

tr500சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையாகி இன்று மீண்டும் தமிழக முதல்வராக பொறுப்பேற்க இருக்கும் ஜெயலலிதாவுக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் லட்சிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் பிரபல இயக்குனருமான டி.ராஜேந்தர் தனது பாணி கவிதை மூலம் ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள கடித அறிக்கை விவரம்:

”போராடி வென்ற பூ மகளே…
கோட்டைக்கு செல்லும் கோமகளே…

ஐந்தாவது முறையாக

அரியணையில் அமரப்போகும்

அஞ்சா நெஞ்சங் கொண்ட ஆரணங்கே…

செயின்ட் ஜார்ஜ் கோட்டையின்

சிம்மாசனத்தை அலங்கரிக்க போகும்

சேலை கட்டிய சிம்மமே…

அன்புள்ளங் கொண்ட

தாய் குலத்தின் சின்னமே…

மாண்புமிகு முதல்வர் அம்மாவுக்கு

மனங்கனிந்த வாழ்த்துகள்” என்று டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.

Leave a Reply