சபரிமலை: சபரிமலை ஐயயப்பன் கோயிலில் 18 படிகள் பித்தளையால் வேயப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் விஷே நாட்களில் இக்கோயிலுக்கு லட்சகணக்கான பக்தர்கள் இருமுடியுடன் 18படிகளில் ஏறிச்செல்லும் போது சேதம் அடைகிறது.இந்நிலையில் 18படிகளில் தங்கத்தகடுகள் வேய பெங்களூரூவைச் சேர்ந்த ஒரு பக்தர் உபயமாக தர முன்வந்துளளார். இதையடுத்து ரூ.5 கோடி செலவில் தங்கத்தகடுகள் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு தேவசம் போர்டும் அனுமதியுள்ளதாகத தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் பணி துவங்கி நிறைவடைய 5 மாத காலம் ஆகும் என தெரிகிறது.