வெளிநாட்டு இந்தியர் குறித்து சர்ச்சை கருத்து கூறிய பிரதமர் மோடி மீது வழக்குப்பதிவு

modiகடந்த சில நாட்களுக்கு முன்னர் பாரத பிரதமர் நரேந்திர மோடி சீனா, மங்கோலியா மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து பல முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்.

இந்நிலையில் பிரதமர் மோடி தென் கொரியாவில் சுற்றுப்பயணம் செய்த போது அவர் பேசிய சில கருத்துக்கள் வெளிநாட்டு இந்தியர்களின் மனதை புண்படுத்தும்படி இருந்ததாக பெரும் சர்ச்சை கிளம்பியது. “கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் இந்தியாவில் பிறந்ததற்காக வருத்தப்பட்டனர். ஆனால் இப்போது அவர்கள் இந்தியாவை நினைத்து பெருமிதம் கொள்கிறார்கள்” என்று குறிப்பிட்டார்.

மோடியின் இந்த பேச்சுக்கு இந்திய எதிர்க்கட்சி தலைவர்களும், ஏராளமான வெளிநாட்டு வாழ் இந்தியர்களும் கண்டனம் தெரிவித்தனர். டுவிட்டரில் இதற்கெனவே ஒரு ஹேஸ்டேக் உருவாக்கி அதில் வெளிநாட்டு இந்தியர்கள் தங்களது மனக்குமுறலை வெளியிட்டனர். மோடி வெளிநாட்டில் போய் இந்தியாவை பற்றி தவறாக பேசியது வெட்கக்கேடானது என்று கருத்து தெரிவித்தனர்.

இந்த நிலையில் மோடியின் பேச்சை எதிர்த்து அவர் மீது உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சமூக ஆர்வலர் சந்தீப் சுக்லா என்பவர் கான்பூர் முதன்மை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு மீனா ஸ்ரீவத்சவா முன்னிலையில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு வருகிற ஜூன் மாதம் 10–ந்தேதி விசாரணைக்கு வருகிறது

Leave a Reply