[carousel ids=”64179,64178,64177,64176,64175″]
அஜீத் பொதுவாக எந்த ஒரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வதை விரும்ப மாட்டார். விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சி உள்பட பல நிகழ்ச்சிகளுக்கு அவர் பலமுறை அழைக்கப்பட்டிருந்தும் அவர் அனைத்து பொது நிகழ்ச்சிகளையும் தவிர்த்து வந்தார். தன்னுடைய படங்களின் பூஜை, பாடல் வெளியீடு மற்றும் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கூட அவர் கலந்து கொள்வதில்லை.
இந்நிலையில் அஜீத்தின் பி.ஆர்.ஓ புதல்வி திருமணம் நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த திருமணத்தில் அஜீத் கலந்து கொண்டார். அஜீத் இந்த திருமணத்தில் கலந்து கொண்டதை அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர். சிரித்த முகத்துடன் திருமண விழாவிற்கு வந்த அஜீத், மணமக்களை ஆசிர்வதித்துவிட்டு சிறிது நேரம் மணமக்கள் மற்றும் உறவினர்களிடம் பேசிவிட்டு திரும்பி சென்றார்.