மேலூர்: மேலூர் அருகே திருவாதவூரில் மீனாட்சி அம்மன் கோயிலின் உபகோயில் ஆன திருமறைநாதர் வேதநாயகி அம்பாள் கோயில் உள்ளது. இக் கோயிலில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மே.27ல் திருவாதவூரில் இருந்து விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஷ்வரர், திருமறை நாதர், பிரியாவிடை மற்றும் வேதநாயகி அம்பாளுடன் மேலூரில் எழுந்தருளும் மாங்கொட்டை திருவிழாவும், மே. 30ல் திருக்கல்யாணமும், மே.31ல் தேரோட்டமும் நடைபெறும் என கோயில் இணை ஆணையர் நடராஜன் தெரிவித்தார்.