இணையதள பயன்பாட்டில் முதல் இடத்தில் இருக்கும் கூகுள் கம்பெனி, தனது வாடிக்கையாளர்களுக்கு புதிதாக 10 செயலிகளை அறிமுகப்படுத்த இருக்கிறது. இவை இணையதள உபயோகிப்பாளர்கள் இடையே நல்ல வரவேற்பைப் பெறும் என்று நம்பப்படுகிறது.
1. ஆன்ட்ராய்டு எம்: கூகுள் ஏற்கனவே அறிமுகம் செய்த லாலிபாப் ஆன்ட்ராய்டிற்கு மாற்றாக அமைகிறது. இதன் மூலம் ஒருவர் சொந்த விஷயங்களான போன் நம்பர்கள், முகவரிகள், பெயர்கள் போன்றவற்றை கூடுதல் பாதுகாப்புடன் சேமிக்க முடியும்.
2. பிரில்லோ ஓ எஸ்: இது இணையதளத்தில் இணைக்கப்படக்கூடிய புதிய ஆப்ரேடிங் சிஸ்டம். மேலும் இது ஆன்ட்ராய்டு இயங்குதளத்தின் எளிய பதிப்பாக இருக்கிறது.
3. புதிய போட்டோ ஷேரிங்: கூகுள் பிளஸ் ல் இருக்கும் போட்டோ ஷேரிங் நீக்கப்பட்டு, பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் போட்டோ ஷேரிங் செய்து கொள்ள வகை செய்கிறது.
4. புதிய நெக்ஸஸ் சாதனங்கள்: புதிதாக அறிமுகமாக இருக்கும் நெக்ஸஸ் சாதனங்கள் ஹுவாய் மற்றும் எல்.ஜி போன்றவைற்றையும் ஏற்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
5. குரோம்கேஸ்ட் 2: இரண்டு வருடங்களுக்கு முன் அறிமுகமான குரோம்கேஸ்ட் மேம்படுத்தப்பட்டிருக்கிறது. கட்டை விரல் அளவே உள்ள இந்த ஊடக ஒலிபரப்பு சாதனம் அனைத்து வகையான வீடியோ பார்மாட்டுகளையும் ஏற்கும் வகையில் உள்ளது.
6. ஸ்மார்ட் வாட்ச்: கூகுள் ஆன்ட்ராய்டை அடிப்படையாகக் கொண்ட ஸ்மார்ட் வாட்ச் அறிமுகமாக இருக்கிறது. இதன் விலை இந்தியாவில் ரூ 90 ஆயிரம் இருக்கும்.
7. அணியக்கூடிய சாதனம்: கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட கூகுள் கண்ணாடிக்கு எதிர்பார்த்த வரவேற்பு இல்லை என்றாலும், புதிதாக அணியக்கூடிய சாதனம் ஒன்றை அறிமுகம் செய்கிறது.
8. செயற்கைக்கோள் வரைபடம்: இந்த அம்சத்தின் மூலம், பூமியின் வெவ்வேறு பாகங்களின் தற்போதைய செயற்கோள் வரைபடத்தைப் பெற முடியும். இதன் மூலம் வானிலையை முன்கூட்டியே அறிய முடியும்.
9. யூடியூப் மூலம் நேரலை விளையாட்டு: கூகுள் தனது யூடியூப் இயங்கு தளம் மூலம் புதிதாக நேரலை விளையாட்டினை தனது வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்கிறது,
10. லாக் இன் களில் புதிய மாற்றங்கள்: கூகுள் வலைதளங்களில் லாக் இன் செய்வதில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டிருக்கிறது. இது வரை ஒரு கட்டமாக செய்யப்பட்டு வந்த லாக் இன்கள் இரண்டு கட்டங்களில் நிறைவேற்றப்படும்.