கொளுத்தும் கோடை வெயில். பள்ளிகள் திறப்பது தாமதமாகுமா?

schoolதமிழகம், புதுச்சேரி, ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானா ஆகிய தென் மாநிலங்களில் கடந்த சில் நாட்களாக மிக கடுமையான வெயில் அடித்து வருகிறது. கடுமையான வெயிலுக்கு தெலுங்கானா மாநிலங்களில் சுமார் 500 பேர் வரை மரணம் அடைந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ள நிலையில், அந்த மாநிலத்தில் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்னும் ஒரு வாரத்தில் திறக்கப்படவுள்ளது. கோடை வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளதால் புதுச்சேரியில் வரும் 3ஆம் தேதி பள்ளிகள் திறக்க இருப்பதாக இருந்து. ஆனால், வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதைத் தொடர்ந்து புதுச்சேரி அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகள் 12ஆம் தேதி திறக்கும் என அம்மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதே போல சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் இங்கும் பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுமா? என பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.  இருப்பினும் இதுகுறித்து அரசு தரப்பிலோ அல்லது பள்ளிக்கல்வித் துறை தரப்பிலோ இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இன்று அல்லது நாளை இதுகுறித்த அறிவிப்பு தமிழக அரசிடம் இருந்து வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply