சமீபத்தில் ராகுல்காந்தி பாஜகவின் ஆட்சிக்கு பூஜ்யம் மதிப்பெண் அளித்திருந்தார். இதற்கு பாஜகவின் தரப்பில் இருந்து கடும் கண்டனம் எழுந்த நிலையில் தற்போது முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரமும் பாஜக அரசுக்கு பூஜ்யம் மதிப்பு கொடுத்திருக்கின்றார். மேலும் காங்கிரஸ் ஆட்சி செய்த கடந்த பத்து ஆண்டுகளில் விவசாயிகளுக்கு பல நல்ல திட்டங்களை கொண்டு வந்ததாகவும் தற்போதைய பாஜக அரசு விவசாயிகளை கண்டுகொள்வது இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்து பேசிய மத்திய அமைச்சர் மனோகர் பாரிக்கர், “பா.ஜ.க.வை விமர்சிக்கும் தகுதி ப.சிதம்பரத்திற்கு இல்லை என்றும் அவர் நிதி அமைச்சராக இருந்தபோது தான் இந்தியாவில் பொருளாதாரத்தில் வீழ்ச்சி ஏற்பட்டது என்றும் கூறியுள்ளார்.
மேலும் கடந்த 10 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் தொழில் அதிபர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் அமைச்சர்கள் இருந்தார்கள் என்றும் விவசாயிகளுக்கு எதுவும் செய்யவில்லை என்றும் கூறிய மனோகர் பார்க்கர், காங்கிரஸ் ஆண்ட மாநிலங்களில் தான் விவசாயிகள் அதிகம் தற்கொலை செய்து கொண்டனர். அதனால், ப.சிதம்பரம் குற்றச்சாட்டுகளுக்கு எல்லாம் பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறியுள்ளார்.
நீதிமன்றம் ஜெயலலிதாவை விடுதலை செய்துள்ளது. இதில் நாங்கள் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. அவர் மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்றதால் எங்களுக்கு மகிழ்ச்சியும் இல்லை, வருத்தமும் இல்லை. சென்னையில் காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜ.க. போட்டியிடுவது குறித்து பரிசீலனை செய்யப்படும்” என்றார்.