சீக்கியர்கள் முக்கியமான அடையாளமாக காணப்படுவது அவர்கள் தலையில் அணிந்திருக்கும் டர்பன் என்பது குறிப்பிடத்தக்கது. எந்த காரணத்தை முன்னிட்டும் சீக்கியர்கள் தலையில் டர்பன் இல்லாமல் வெளியே வரமாட்டார்கள். அதுபோல் டர்பனை வெளியில் கழட்டவும் மாட்டார்கள்.
இந்நிலையில்நியூசிலாந்து தலைநகர் ஆக்லாந்தில் ஐந்து வயது சிறுவன் டியாஜான் பாஹியா என்பவன் நேற்று காலை காரில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் மிதந்து உயிருக்கு போராடினான். அவனுடைய தலையில் இருந்து ரத்தம் ஏராளமாக வெளியேறி கொண்டிருந்தது.
இதைபார்த்த சீக்கியர் ஒருவர் உடனடியாக சில நொடிகள் கூட யோசிக்காமல் தனது தலையில் இருந்த டர்பனை கழட்டி சிறுவனின் ரத்தத்தை நிறுத்தும் பணியில் ஈடுபட்டார். இதுகுறித்டு அந்த சீக்கியர் ஹர்மான் சிங் கூறும்போது, ‘ஒரு உயிர் துடித்துக்கொண்டிருக்கும்போது டர்பனை கழட்டுவது குறித்து நான் சிறிதும் யோசிக்கவில்லை. எனக்கு டர்பன் மீது மிகுந்த மரியாதை உண்டு. ஆனால் அதே நேரத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் ஒருவரை காப்பாற்ற டர்பனை கழட்டுவதில் தவறில்லை என்றே என் மனதில் பட்டது என்று கூறினார்.
ஹர்மான்சிங்கின் செயலுக்கு உலகெங்கிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இவரை பாராட்டியவர்கள் பெரும்பாலும் சிக்கியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது