யாருக்கு அதிக அதிகாரம்? டெல்லி நீதிமன்ற உத்தரவால் அரவிந்த் கெஜ்ரிவால் உற்சாகம்.

delhiகடந்த சில நாட்களாக டெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும், டெல்லி துணைநிலை ஆளுனருக்கும் ஏற்பட்டு வந்த மோதல் டெல்லி நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது.

டெல்லியில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர்களை நிர்வகிக்கும் உரிமை யாருக்கு உள்ளது என்பது குறித்து கவர்னர் நஜீப் ஜங்குக்கும், முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதுகுறித்து  சமீபத்தில் மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில் கவர்னருக்கே அதிகாரிகளை நிர்வகிக்கும் உரிமை இருப்பதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் டெல்லி அரசின் ஊழல் தடுப்புத் துறைக்கு எதிரான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, டெல்லியில் கவர்னருக்கு அதிகாரிகளை மாற்ற அதிகாரம் கொடுத்திருப்பது சந்தேகத்தை தருகிறது. ஆனால் டெல்லி மாநில ஊழல் தடுப்புத் துறைக்கு லஞ்சம் வாங்கும் போலீசாரை கைது செய்யும் அதிகாரம் உள்ளது’’ என்று தீர்ப்பளித்துள்ளார்.

இந்த தீர்ப்பு மத்திய அரசுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.  டெல்லி நீதிமன்றத்தின் உத்தரவால் உற்சாகம் அடைந்த முதல்வர் கெஜ்ரிவால், உடனடியாக 9 உயர் அதிகாரிகளை இடமாற்றம் செய்தும், மீண்டும் பொறுப்புகள் வழங்கியும் அதிரடியாக உத்தரவிட்டார். இதற்கு கவர்னர் நஜீப்ஜங் ஒப்புதல் வழங்குவாரா என்பது இனிமேல்தான் தெரியவரும்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் நேற்று கூடிய அவசர சட்டசபை கூட்டத்தில் மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிராகவும், மத்திய அரசு ஊழியர்கள் மீது டெல்லி போலீசார் நடவடிக்கை எடுக்க முடியாது என்ற விதிகளுக்கு எதிராகவும் தீர்மானத்தை டெல்லி அரசு நிறைவேற்றியது.

இந்நிலையில் கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் “அனைவரும் அரசியல் சாசனத்திற்கு உட்பட்டே நடக்கவேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டெல்லி அரசுக்கு மத்திய அரசு எந்தவித நெருக்கடியையும் கொடுக்காது. மேலும் அவர்களுடன் இணைந்து செயல்படவே விரும்புகிறோம்” என தெரிவித்துள்ளார்

Leave a Reply