கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மும்பை விமான நிலையத்தின் மேல் மர்ம பொருள் ஒன்று பறந்ததாக பரபரப்பான செய்திகள் வெளியான நிலையில் நேற்று இரவு ஆந்திராவில் இரவு நேரத்தில் பறவைகள் போன்ற தோற்றம் கொண்ட இரண்டு உருவங்கள் வானத்தில் பறந்து திரிவதால் மக்கள் மத்தியில் பெரும் பீதி நிலவியது.
நெல்லூர் மாவட்டத்தில் புறநகர் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக இரவு 8 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை மனித வடிவில் வித்தியாசமான உருவங்கள் ஜோடி ஜோடியாக வானத்தில் இறக்கைகளுடன் பறப்பதாக அதிர்ச்சித் தகவல் பரவி வருகிறாது. இந்நிலையில் நேற்று இரவு 2 வெள்ளித் தகடு போன்ற இறக்கைகளுடன் ஜோடிகளாக மனித உருவங்கள் வானத்தில் பறந்தது போன்ற தகவல்கள் இந்த பகுதியில் மிக வேகமாக பரவி வருகின்றது.
இந்த உருவங்கள் பூமியை நோக்கி பறந்து வருவதாகவும் பின்னர் வானத்துக்கு சென்று விடுவதாகவும் அந்த பகுதி மக்கள் பீதியுடன் கூறுகின்றனர். சில உருவங்கள் வீட்டுக் கூரை மீது நின்றபடி கீச்… கீச்… என்று வித்தியாசமான ஒலியில் பேசிக் கொள்வதாகவும் பொது மக்கள் தெரிவித்தனர்.
அந்த உருவங்கள் முதலில் கொக்கு அல்லது நாரையாக இருக்கலாம் என்று முதலில் கூறப்பட்டது. அது மனித உருவில் இருப்பதால் பேயாக இருக்கலாம் என்றும், தேவதைகளாக இருக்கலாம் என்றும் பொது மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.மேலும் இவர்கள் வேற்று கிரகத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்றும் சிலர் கூறுகிறார்கள். இந்த உருவத்தால் நெல்லூர் பகுதியில் இரவு நேரங்களில் பரபரப்பு கலந்த பீதி ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ ஒன்றும் இணையத்தில் வெளியாகி பரபரப்பைக் கூட்டியுள்ளது. அதில், இரண்டு உருவங்கள் பறவைகள் போன்ற தோற்றத்துடன் வானில் பறப்பது பதிவாகியுள்ளது. ஆனால், அந்த வீடியோ தெளிவற்றதாக இருப்பதால், அது பறவைகள்தானா என்பதை உறுதியாகவும் இயலவில்லை.
https://www.youtube.com/watch?v=4QXNRyV8AtM