பென்டிரைவில் வைரஸை நீக்க..!

7236296_f520-350x250

சுலபமாக தகவல்களை கையாள நமக்கு துணைபுரிவது பென்டிரைவாகும். இதனை பல கணினிகளில் பயன்படுத்துவதன் மூலம் வைரஸ் சுலபமாக வந்து விடுகிறது. இதுபோன்று வைரஸ் உள்ள பென்டிரைவினை திறக்கவோ அல்லது தகவல்களை ஏற்றவோ அல்லது இறக்கவோ முடியாது. பென்டிரைவில் முக்கியமான தகவல்கள் ஏதும் இல்லை என்றால் அதனை “பார்மட்” செய்து வைரஸினை நீக்கிவிடலாம்.

ஒரு வேளை அதில் முக்கியமான தகவல் இருப்பின் என்ன செய்ய? கவலையில்லை. அதனை எந்த விதமான மென்பொருளும் இன்றி சுலபமாக மீட்டு விடலாம். அது எவ்வாறு என காணலாம்.

பென்டிரை வினை கணினியில் இணைத்தப்பின் செய்ய வேண்டியது:

1. START > RUN சென்று அதில் CMD என டைப் செய்து ENTER கீயினை அழுத்தவும்

2. இப்பொழுது Command Prompt திறக்கும். அடுத்து பென்டிரைவ் கணினியில் எந்த டிரைவில் உள்ளது என அறிந்து கொண்டு Command Promptல் அந்த டிரைவிற்கு செல்ல வேண்டும்.(உ.ம்) H டிரைவ் எனில் H:\> என மாற்றிக் கொள்ள வேண்டும்.

3. பின்பு H:\>attrib sh/s/d *.* என டைப் செய்ய வேண்டும். சரியான இடைவெளியுடன் டைப் செய்தது உறுதி செய்தவுடன் ENTER கீயினை அழுத்த வேண்டும். பின்பு சிறிது நேரம் கழித்து பென்டிரைவினை திறந்து பார்த்தால் அனைத்து தகவலும் நமக்கு கிடைக்கும். II அழிக்க முடியாத பைல்களை அழிக்க சில நேரங்களில் ஹார்ட் டிஸ்கில் இடப்பற்றாக் குறை ஏற்படும் போது தேவையில்லாத பைல்களை அழிப்போம்.

அது போன்று நீக்கும் போது சில பைல்கள் நேரிடையாக அழிக்க முடியாமல் போகலாம் Cannot Delete File என தோன்றும். இது போன்ற பைல்களை அழிக்க கீழ்வரும் செயல்களை பின்பற்றினால் அழிக்க முடியும்.

1. அழிக்க நினைக்கும் பைல் எந்த டிரைவில் எந்த போல்டரில் உள்ளதென அறிந்து கொள்ள வேண்டும்

2. எடுத்துக் காட்டாக சி டிரைவில் mydoc என்ற போல்டரில் உள்ளதெனில் அதன் சரியான Path தினை அறிந்து கொள்ள வேண்டும். C:\Documents and Settings\mydoc.txt 03. பாதுகாப்பாக இதனை செய்ய கணினியை ரீஸ்டார்ட் செய்து கணினி பூட் ஆகும் போது F8 அழுத்த வேண்டும். இப்பொழுது திரையில் Advance Boot Options Menu தெரியும். அதில் Safemode With Command Prompt என்பதில் கிளிக் செய்து டாஸ் ப்ரம்ப்டில் நுழைய வேண்டும்.

4. இனி Command Promptல் துடிக்கும் புள்ளியில் cd C:Documents and Settings என டைப் செய்ய வேண்டும். இதில் cd என்பது Change Directory என்பதை குறிக்கின்றது.

5. மேலே கூறியவாறு டைப் செய்து என்டர் அழுத்திய உடன் பைல் உள்ள டைரக்டரி யில் சென்று நிற்கும். இப்பொழுது அதில் del mydoc.txt என டைப் செய்து என்டர் தட்டினால் நாம் Delete செய்ய நினைத்த பைல் இப்பொழுது காணாமல் போயிருக்கும்.

Leave a Reply