சீனாவை சேர்ந்த 55 வயது நபர் ஒருவர் தனது உடலில் ஒரு மில்லியன் தேனிக்களுக்கும் மேல் சுமந்து உலக சாதனை செய்துள்ளார். இவருடைய சாதனையை கின்னஸ் சாதனை நிறுவனம் ஏற்றுக்கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
சீனாவின் ‘டைய்யான்’ என்ற பகுதியை சேர்ந்த 55 வயது நபர் காவோ பிங்குவோ என்பவர் கடந்த 35 வருடங்களாக தேனிக்களுடன் இணைந்து பல உலக சாதனை செய்துள்ளார். அதன் உச்சகட்டமாக சமீபத்தில் இவர் மீது சுமார் 1.1மில்லியன் தேனீக்கள் மொய்த்தன. இவர் மீது மொய்த்த தேனீக்களின் எடை சுமார் 109.1 கிலோ என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் இந்த சாதனை செய்வதற்கு இவருடைய உதவியாளர்கள் பாதுகாப்பான உடையணிந்து உதவி செய்தனர். இவரை ஒரு நாற்காலியில் உட்கார வைத்து தயாராக வைத்திருந்த தேனீக்களின் கூடுகளை திறந்து வைத்ததும் இவர் மீது தேனீக்கள் ஒட்டிக்கொண்டன. ஒருசில நிமிடங்களில் இவர் மீது 109 கிலோ எடையுள்ள ஒரு மில்லியனுக்கும் மேல் தேனீக்கள் ஒட்டிக்கொண்டன. தேனீக்கள் முழுவதும் ஒட்டிக்கொண்ட பின்னர் இவர் எவ்வித பதட்டமும் இன்றி சிகரெட்டை பற்ற வைத்து புகைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சாதனையை இவர் கின்னஸ் சாதனை நிறுவன அதிகாரிகள் முன் செய்து காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் சுமார் 1மில்லியன் தேனீக்களை உடம்பில் ஒட்டிக்கொள்வதே சாதனையாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.