சமீபத்தில் சீனா, மங்கோலியா மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்த பாரத பிரதமர் நரேந்திர மோடி பல முக்கிய ஒப்பந்தங்களில் அந்தந்த நாட்டு தலைவர்களின் முன்னிலையில் கையெழுத்திட்டார். மேலும் இந்தியாவுக்கு தொழில் செய்ய வருமாறு அவர் அந்நாடுகளின் தொழிலதிபர்களையும் கேட்டுக்கொண்டார்.
மூன்று நாடுகளின் பயணம் வெற்றி பெற்றதை அடுத்து பிரதமர் மோடி வரும் ஜூன் மாதம் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் செய்யவுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் இந்த சுற்றுப்பயணத்தில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் அவருடன் வங்கதேச சுற்றுப் பயணத்தில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது..
அரசியல் களத்தில் எதிரும் புதிருமாக இருந்த மோடி மற்றும் மம்தா பானர்ஜி சமீபகாலமாக தங்கள் நிலைப்பட்டை மாற்றிக்கொண்டு இணக்கமான உறவை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. மம்தா பானர்ஜி, பிரதமர் மோடியுடன் வங்கதேசத்துக்குச் செல்லத் திட்டமிட்டிருப்பது பலரையும் உற்றுநோக்க வைத்துள்ளது.