சபரிமலை:பிரதிஷ்டை தினத்தையொட்டி சபரிமலை நடை நேற்று மாலை திறக்கப்பட்டது.சபரிமலை பிரதிஷ்டை தினத்தையொட்டி ஒரு நாள் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இன்று நடை பெறும் பிரதிஷ்டை தினத்துக்காக நேற்று மாலை 5.30-க்கு நடை திறந்தது. மேல்சாந்தி கிருஷ்ணதாஸ் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றினார். வேறு எந்த பூஜைகளும் நடைபெறவில்லை. இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.
இன்று அதிகாலை ஐந்து மணிக்கு நடை திறந்ததும் நிர்மால்யதரிசனத்துக்கு பின்னர் நெய்யபிஷேகம் தொடங்கும். தொடர்ந்து கணபதிஹோமம் நடைபெறும். சகஸ்ரகலசபூஜை, களபாபிஷேகம், அஷ்டாபிஷேகம், உதயாஸ்தமனபூஜை ஆகிய பூஜைகள் நடைபெறும். இரவு ஏழு மணிக்கு படிபூஜை நடைபெறும். பூஜைகள் தந்திரி கண்டரரு ராஜீவரரு தலைமையில் நடைபெறும். தொடர்ந்து அத்தாழபூஜைக்கு பின்னர் இரவு பத்து மணிக்கு நடைஅடைக்கப்படும்.அதன் பின்னர் ஆனி மாத பூஜைக்காக ஜூன் 15-ம் தேதி மாலை 5.30-க்கு மீண்டும் நடை திறக்கும்.