பாரீஸ் பாலத்தில் தொங்கும் நேர்த்திக்கடன்’ பூட்டுக்களை அகற்ற பிரான்ஸ் அரசு முடிவு

loveபிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள பாரிஸியன் ஆற்றுப் பாலத்தின் மேல் அமைக்கப்பட்டுள்ள இரும்பு கிரில்லிலான தடுப்பு சுவற்றில் நம்மூரில் பெண்கள் குழந்தைகள் வேண்டி மரங்களில் தொட்டில்களை கட்டுவதுபோல காதல் ஜோடிகள் ‘நேர்த்திக்கடன்’ என்ற பெயரில் பூட்டுக்களை மாட்டி காதல் யாகம் செய்து வருகின்றனர். உலக நாடுகளில் இருந்து சுற்றுலா வரும் காதலர்களும் தங்களது பங்குக்கு ஒரு நேர்த்திக்கடன் பூட்டை மாட்டிவிட்டுப் போவதால் லட்சக்கணக்கான பூட்டுகள் இங்கு தொங்குகின்றன.

இந்த பூட்டுகளின் எடை தாங்காமல சமீபத்தில் பாரிஸியன் பாலத்தின் ஒருபகுதி இடிந்து விழுந்ததாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில், பாரிஸ் நகரின் பாரம்பரிய எழிலை சீர்குலைத்து, மூடநம்பிக்கையை வளர்க்கும் நேர்த்திக்கடன் பூட்டுகளை இனி யாரும் மாட்டக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், ஏற்கனவே மாட்டப்பட்டுள்ள பூட்டுகள் அனைத்தையும் அகற்றவும் அரசு நிர்வாகம் முடிவு செய்துள்ளது. தடுப்பு சுவற்றில் இரும்பு கிரில்லுக்கு பதிலாக கண்ணாடிகளால் ஆன பேனல்களை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

பிரான்ஸ் அரசின் இந்த முடிவுக்கு உலகெங்கிலும் உள்ள காதலர்கள் தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளத்.

Leave a Reply