இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்ட இடத்தில் புதிய 1250 மாடி கட்டிடம் திறப்பு. பார்வையாளர்கள் குவிந்தனர்.

[carousel ids=”64837,64838,64839,64840,64841,64842,64843,64844,64845,64846,64847,64848,64849,64850,64851,64852″]

கடந்த 2001ஆம் ஆண்டு அமெரிக்காவின் இரட்டை கோபுரங்களை அல்கொய்தா தீவிரவாதிகள் விமானங்களை மோதி தகர்த்த சம்பவத்தில் ஆயிரக்கணக்கானோர் பலியாகினர். இந்த இடத்தில் அதேபோன்ற இரட்டை கோபுரங்களை கட்டும் பணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்டது. இந்த புதிய இரட்டை கோபுர கட்டிடங்களில் ஒன்று கடந்த வெள்ளியன்று பார்வையாளர்களுக்காக திறந்து விடப்பட்டது.

102 மாடிகள் கொண்ட இந்த கட்டிடத்தை காண அமெரிக்கர்கள் பெருமளவில் குவிந்தனர். 1250 அடி உயரம் கொண்ட இந்த கட்டிடத்தை பார்வையிட கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. பெரியவர்களுக்கு $32 மற்றும் சிறியவர்களுக்கு $26 என்றும் 65 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு $30 என்ற அளவில் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. காலை ஒன்பது மணிமுதல் நள்ளிரவு வரை இந்த கட்டிடம் பார்வையாளர்களுக்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்

செப்டம்பர் 9ஆம் தேதி 2001ஆம் ஆண்டு தாக்குதலில் பலியானவர்களின் உறவினர்கள் பெருமளவு இந்த கட்டிடத்தை பார்வையிட்டதாக கூறப்படுகிறது. இந்த கட்டிடத்தை பார்வையிட்ட பலர் செல்பி புகைப்படங்களை எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply