இந்தியா-பாகிஸ்தான் தொடர் நடைபெறுமா? சுஷ்மா ஸ்வராஜ் பதில்

cricketகார்கில் போர் மற்றும் மும்பை தாஜ் ஓட்டல் தாக்குதலுக்கு பின்னர் இந்திய கிரிக்கெட் அணியும், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியும் எந்த தொடரிலும் இதுவரை விளையாடவில்லை. உலகக்கோப்பை போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் இடையே வருகிற டிசம்பர் மாதத்தில் ஐக்கிய அரபு எமிரேட்சில் 3 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் இரண்டு 20 ஓவர் போட்டி கொண்ட தொடர் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. ஆனாலும் இந்த போட்டிகள் இருநாட்டு அரசுகள் கொடுக்கும் அனுமதியை பொறுத்தே இறுதி செய்யப்படும்.

இந்நிலையில் நேற்று  மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜிடம் இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் குறித்து நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த சுஷ்மா, “இந்த விஷயத்தில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அதுபற்றி நான் ஆலோசனை நடத்தவும் இல்லை” என்று கூறினார்.

போட்டி நடப்பதற்கு இன்னும் ஆறு மாதகாலம் இருப்பதால் அதுவரை பொறுத்திருக்க போவதாகவும், இருநாட்டு அரசுகளும் இந்த போட்டி குறித்து தங்கள் முடிவை அறிவித்த பின்னரே போட்டித் தொடர் நடைபெறும் தேதிகள் மற்றும் போட்டிகள் நடைபெறும் இடங்கள் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் என கொல்கத்தாவில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ஷகாரியார் கான் மற்றும் பிசிசிஐ தலைவர் டால்மியா இணைந்து வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply