ஜெ.வழக்கில் மேல்முறையீடு உறுதி. கர்நாடக அரசின் அதிரடி முடிவால் அதிமுக அதிர்ச்சி

jayalalithaஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் மேல்முறையீடு செய்வது என கர்நாடக அரசு இன்று முடிவு செய்துள்ளது. இந்த முடிவு அதிமுக தொண்டர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் மேல்முறையீடு செய்வது குறித்து முடிவெடுக்க இன்று பெங்களூரில் கூடிய அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இருப்பினும் எந்த தேதியில் மேல்முறையீடு செய்வது என்பது குறித்து இன்னமும் முடிவு செய்யவில்லை என கர்நாடக சட்டத் துறை அமைச்சர் ஜெயச்சந்திரா தெரிவித்துள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்வதாக வந்த தகவல், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்ப்பதால் இதுவரை இடைத்தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று அறிவித்த திமுக உள்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் களத்தில் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கர்நாடக அரசு இன்று எடுத்த முடிவை திமுக, காங்கிரஸ் போன்ற கட்சிகள் வரவேற்றுள்ளன. இதுகுறித்து கருத்து தெரிவித்த கர்நாடக அரசு தரப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா ‘கர்நாடக அரசு சட்டரீதியான முடிவை எடுத்துள்ளதாகவும், கர்நாடக அரசு கேட்டுக்கொண்டால் இவ்வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக ஆஜராவேன் என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply