ஃபேஸ்புக் இணையதளத்தால் வேலையை இழந்த அமெரிக்க விமான பணிப்பெண்

[carousel ids=”64893,64894,64895,64896,64897″]

ஃபேஸ்புக், டுவிட்டரில் அதிக லைக்குகள் வாங்க வேண்டும் என்பதற்காக தற்கால இளைஞர்கள் பல விபரீத விளையாட்டுக்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் ஒருசிலர் தங்கள் உயிரையும் இழந்துள்ள நிலையில் விமான பணிபெண் ஒருவர் ஃபேஸ்புக்கில் பதிவு செய்த புகைப்படம் ஒன்றினால் தன்னுடைய வேலையை இழந்துள்ளார்.

அமெரிக்காவில் உள்ள சிகாகோ விமான நிலையத்தில் விமானம் ஒன்று புறப்பட தயார் நிலையில் இருந்தபோது, அந்த விமானத்தில் பணிபுரியும் எரிக்கா என்ற பணிப்பெண்,  அந்த விமானத்தின் எஞ்ஜினுக்குள் திடீரென ஏறி நின்றுகொண்டு விதவிதமாக ‘போஸ்’ கொடுத்து தனது தோழி ஒருவர் மூலம் புகைப்படம் எடுத்து கொண்டார்.

என்ஜினுக்குள் எரிக்கா நிற்பதும், அவரை தோழி ஒருவர் புகைப்படம் எடுத்துக்கொண்டு இருப்பதையும் பார்த்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். சிறிது நேரத்தில் எரிக்கா அந்த புகைப்படங்களை தனது பேஸ்புக்கில் பதிவேற்றினார். அந்த விமானம் புறப்பட்டு தனது பயணத்தை ஆரம்பித்தது. ஆனால் எரிக்கா தனது ஃபேஸ்புக்கில் பதிவு செய்த புகைப்படங்கள் பெரும் சர்ச்சையை கிளப்பியது.

அவர்மீது புகார்கள் குவிந்ததால் உடனடியாக அதிரடி நடவடிக்கை எடுத்த அமெரிக்க விமான நிலைய அதிகாரிகள் எரிக்காவை பணியில் இருந்து நீக்கி உத்தரவிட்டனர். விமானத்தில் இருந்து இறங்கிய போது எரிக்கா தான் டிஸ்மிஸ் செய்யப்பட்டது தெரியவந்ததால் அவர் மிகவும் அதிர்ச்சிக்குள்ளானார்.

Leave a Reply