இந்திய பிரதமர் நரேந்திர மோடியை கைது செய்பவர்களுக்கு ரூ.100 கோடி பரிசு அளிக்கப்படும் என பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஐமாத் இ இஸ்லாமி என்ற கட்சி தலைவர் சிராஜுல் ஹக் அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ராவல்கோட் என்ற இடத்தில் நடைபெற்ற பொதுநிகழ்ச்சியில் பேசிய ஜமாத் இ இஸ்லாமி கட்சியின் தலைவர் சிராஜுல் ஹக் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் மற்றொரு தலைவர் செய்யது சலாஹுத்தீனை கைது செய்ய உதவி செய்பவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என்று இந்திய அரசு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய சிராஜூல் ஹக், “இந்திய பிரதமர் மோடி அவர்களே, உங்களிடம் ஒன்றை தெரிவிக்க விரும்புகிறேன். உங்களாலோ, உங்களின் ஏஜெண்டுகளாலோ சலாஹுத்தீனை கைது செய்ய முடியாது. சலாஹுத்தீனை கைது செய்பவர்களுக்கு ரூ.50 கோடி பரிசு அறிவித்துள்ளீர்கள். அதற்கு பதிலடியாக நானும் ஒரு அறிவிப்பை அறிவிக்கிறேன், மோடியை கைது செய்பவர்களுக்கு ரூ.100 கோடி பரிசு அளிக்கப்படும். காஷ்மீ்ர் பாகிஸ்தானின் ஒரு பகுதி ஆகும். இந்தியாவுடன் நட்புறவு பாராட்டும் எந்த பாகிஸ்தான் அரசியல் தலைவரும் பாகிஸ்தானுக்கும், காஷ்மீர் மக்களுக்கும் துரோகி ஆவார். இந்துஸ்தானுடன் நட்பு வேண்டும் எனில் இந்துஸ்தான், டெல்லி, மும்பைக்கு சென்றுவிடுங்கள். உங்களுக்கு இஸ்லாமாபாத்தில் இடம் இல்லை
இவ்வாறு ஆவேசமாக அந்த கூட்டத்தில் சிராஜூல் ஹக் பேசியுள்ளார்.