கடலூர்: கடலூர், பாடலீஸ்வரர் கோவிலில் நடைபெற்று வரும் வைகாசிப் பெருவிழாவில் 9ம் நாளான நேற்று காலை நடந்த தேரோட்டத்தில் ஆயி ரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். கடலூர், திருப்பாதிரிப்புலியூரில் உள்ள பாடல் பெற்ற ஸ்தலமான பாடலீஸ்வரர் கோவிலில் வைகசி பெருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்து தினமும் சுவாமிக்கு காலை மற்றும் மாலையில் சிறப்பு அபி÷ ஷகம் மற்றும் பூஜையைத் தொடர்ந்து இரு வேளையும் சுவாமி வீதியுலா நடந்து வருகிறது. ஒன்பதாம் நாளான நேற்று தேர் திருவிழா நடந்தது. அதனையொட்டி நேற்று காலை 6:00 மணிக்கு பாடலீஸ்வரர், பெரியநாயகிக்கு சிறப்பு பூஜை மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கு தீபாராதனை நடைபெற்றது. யாத்ரா தானத்தைத் தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் கோவிலை வலம் வந்து யாக சாலையில் தீபாராதனை நடந்தது. பின்னர், கோவில் முன் உள்ள மண்டபத்தில் பாடலீஸ்வரர், பெரியநாயகிக்கு சிறப்பு பூஜை செய்து, மாலை பட்டு சாற்றி தீபாராதனை நடந்தது. 9:00 மணிக்கு வேதமந்திர ங்கள் முழங்கி, இன்னிசை இசைக்க பெரியநாயகி சமேதராக பாடலீஸ்வரர் ஊர்வலமாக தேரடிக்கு வந்து, அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தரு ளினார். அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் சரண கோஷம் எழுப்பி வணங்கினர்.
தீபாராதனையைத் தொடர்ந்து காலை 9:40 மணிக்கு பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் துவங்கியது. பகல் 1:10 மணிக்கு தேர் நிலையை வந்தடைந்தது. மாலை 6:00 மணிக்கு கோவில் குளக்கரையில் திருவிளக்கு பூஜை நடந்தது. மாலை 7:00 மணிக்கு பெரியநாயகி சமேத பாடலீஸ்வரர் தேரிலிருந்து இறங்கி மண்டகப்படி பூஜை நடந்தது. இரவு 8:30 மணிக்கு பஞ்சமூர்த்திகள் கோவிலை சென்றடைந்தனர். பூஜைகளை நாகராஜ குருக்கள், சிவா மற்றும் ராக்கேஷ் குருக்கள் நடத்தினர். தேர் திரு விழாவையொட்டி, டி.எஸ்.பி., ராமமூர்த்தி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.