திருப்புத்தூர்: திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயில் மூலவர் கர்ப்ப கிரகத்தின் கூரையில் ருத்ராட்ச விதானம் பிரதோஷக்குழுவினர் மற்றும் பக்தர்களால் அமைக்கப் பட்டுள்ளது. நேபாளத்திலுள்ள காட்மாண்டில் இருந்து ஐந்து முக வடிவிலான சுமார் 16 ஆயிரம் ருத்ராட்சங்கள் வாங்கி வரப் பட்டது. குன்றக்குடி பொன்னம்பல அடிகள் விதான நிர்மாணப் பணியை துவக்கி வைத்தார். திருத்தளிநாதர் மூலவர் கர்ப்ப கிரகத்தில் தாமிரக் கம்பியால் வலை பின்னப்பட்டு, அதில் ருத்ராட்சங்கள் பொருத்தப்பட்டு, பிரமிட் வடிவிலான கோபுர விதானம் அமைக்கப்பட்டுள்ளது. வைகாசி விசாக பெருவிழா நிறைவாக நேற்று நடந்த திருவீதி உலாவில் சுவாமி-அம்பாள் வாகனக் கூரையாக இந்த ருத்ராட்ச விதானம் அமைக்கப்பட்டிருந்தது.