சுப்பிரமணியன் சாமிக்கு பிடிவாரண்ட். அசாம் நீதிமன்றம் அதிரடி உத்தரவால் பரபரப்பு

swamy 1பாஜகவின் முக்கிய தலைவரும் பிரதமர் மோடிக்கு மிகவும் நெருக்கமானவருமான சுப்பிரமணியசாமிக்கு அசாம் நீதிமன்றம் ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரண்ட் ஒன்றை பிறப்பித்துள்ளது. இதனால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இஸ்லாமியர்களின் வழிபாட்டுத்தலமான மசூதி குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை பொது நிகழ்ச்சி ஒன்றில் பேசியதற்காக இந்த பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த மார்ச் மாதம் அசாமில் உள்ள கவுகாத்தியில் நடந்த பொதுநிகழ்ச்சி ஒன்றில் பேசிய சுப்பிரமணியசாமி  ”மசூதிகள் மத வழிபாட்டு தலங்கள் இல்லை என்றும் அவற்றை எப்போது வேண்டுமானாலும் கட்டலாம், எப்போது வேண்டுமானாலும் இடிக்கலாம்” என்று கூறியுள்ளார்.

இந்த சர்ச்சைக்குரிய பேச்சுக்கு இஸ்லாமியர்கள் உள்பட பல்வேறு மத மற்றும் சமூக அமைப்புகளை சேர்ந்தவர்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அசாமில் உள்ள கிரிஷக் முக்தி சங்ராம் சமிதி என்ற அமைப்பு சுப்பிரமணியன்சாமி மத மோதல்களை தூண்டும் வகையில் பேசியதாகவும், அவர் மீது வழக்கு பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காவல்நிலையத்தில் புகார் செய்தது. இந்த புகாரை ஏற்றுக்கொண்ட அசாம் காவல்துறையினர் சுப்பிரமணியன் சாமி மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை அசாம் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் வழக்கு தொடர்பாக சுப்பிரமணியசாமி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று அசாம் நீதிமன்றம் கடந்த 19ஆம் தேதி சம்மன் அனுப்பியது. ஆனால், இதுவரை சுப்பிரமணியசாமியிடம் இருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை. இதையடுத்து, சுப்பிரமணிசாமிக்கு ஜாமீனில் வெளியில் வர முடியாத பிடிவாரண்டை பிறப்பித்த நீதிபதி, சுப்பிரமணியசாமியை கைது செய்து வரும் 30ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply