நில நடுக்கம் ஏற்பட முக்கிய காரணம் பெண்கள் ஜீன்ஸ் அணிவதுதான். பாகிஸ்தான் அரசியல்வாதி

jeansபாகிஸ்தான் நாட்டின் அரசியல்வாதிகள் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்தை கூறிவிட்டு பின்னர் வாங்கி கட்டிக்கொள்வது வாடிக்கையாக நடப்பது ஒன்றுதான் எனினும் சமீபத்தில் பாகிஸ்தான் அரசியல்வாதி ஒருவர் கூறியுள்ள கருத்தால் சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்யும் நபர்களுக்கு சரியான வேட்டை ஒன்று கிடைத்துள்ளது.  நாட்டில் பெண்கள் `ஜீன்ஸ்’ அணிவதால்தால் நிலநடுக்கம் போன்ற பேரழிவுகளுக்கு முக்கிய காரணம் என்று பாகிஸ்தான் நாட்டை  சேர்ந்த ஜாமியத் உலமா இ இஸ்லாமி ஃபசல் எனும் கட்சியின் தலைவர் மவுலானா பசலூர் ரஹ்மான் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் தலைநகரில் நேற்று நடைபெற்ற அந்தக் கட்சி சார்பாக நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசும்போது, “பெண்கள் `ஜீன்ஸ்’ அணிவதுதான் நிலநடுக்கம், விலைவாசி உயர்வு போன்ற பேரழிவுகளுக்குக் காரணம். மாவைக் கட்டி வைக்கும் சாக்குப்பையைப் போல தன் உடலை மறைத்துக்கொள்ளாத பெண்மணிகள் அனைவரும் பேரழிவின் ஆயுதங்கள்” என்று கூறியுள்ளார்.

மேலும் அவர், “பெண்களை அத்தகைய சாக்குப்பையில் கட்டி வைத்து வீட்டிற்குள்ளேயே வைத்திருந்தால், தலிபான்கள் நம்மைத் தாக்க மாட்டார்கள். `ஜீன்ஸ்’ அணியும் பெண்கள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் போர் தொடுக்க வேண்டும்” என்றும் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இவருடைய கருத்து மூட நம்பிக்கையின் உச்சக்கட்டம் என உலகெங்கிலும் உள்ள சமூக வலைத்தளங்களின் பயனாளிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply