சிதம்பரம்: சிதம்பரம் திரவுபதியம்மன் கோவில் வசந்த மகோற்சவத்தையொட்டி நடந்த தீ மிதி உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து ÷ நர்த்திக்கடன் செலுத்தினர். சிதம்பரம் திரவுதிபதியம்மன் கோவிலில் 27ம் ஆண்டு வைகாசி வசந்த உற்சவ பெருவிழா கடந்த 22ம் தேதி கொடியே ற்றத்துடன் துவங்கியது. இதனையொட்டி தினமும் திரவுபதியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு தீபாராதனை நடந்தது. முக்கிய விழாவான நேற்று தீமிதி உற்சவம் நடந்தது. இதனையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு தீபாராதனை நடைபெற்று திரவுபதியம்மன் சிறப்பு அலங்காரத்தில் சன்னதி முகப்பில் எழுந்தருளினார். மாலை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலை வலம் வந்து தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அறங்காவலர் கவுன்சிலர் ரமேஷ் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.