டாப் 10 கிரிமினல் பட்டியலில் பிரதமர் மோடி. மன்னிப்பு கேட்டது கூகுள்

modiகூகுள் இணையதளத்தில் ஆங்கிலத்தில் இந்தியாவின் டாப் 10 கிரிமினல்கள் லிஸ்ட்டை தேடினால் அதில் வரும் புகைப்படங்களை பார்த்தால் அதிர்ந்து போய்விடுவீர்கள். காரணம் அந்த புகைப்படங்களின் வரிசையில் மூன்றாவது இடத்தில் இருப்பவர் நமது பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம். இந்த பட்டியலில் அல் காபோன், ஒசாமா பின்லேடன், தாவுத் இப்ராஹீம், ஹசீஃப் சையத், ஜாக்குவின் குஸ்மான், ஜார்ஜ் புஷ் ஆகியோர்களோடு பிரதமர் மோடியும் புகைப்படங்களும் இடம்பெற்றிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து கூகுள் நிறுவன செய்தித் தொடர்பாளர் ஒருவர் இன்று செய்தியாளர்களிடம் பேட்டியளித்தபோது, “இந்த தேடல் முடிவுகள் எங்களை மிகவும் பாதித்துள்ளது. இது எந்த வகையிலும் எங்கள் நிறுவனத்தின் கருத்து அல்ல. சில நேரங்களில் இதுபோன்ற குறிப்பிட்ட கேள்விகளுக்கான தேடலின் முடிவில் இத்தகைய வியப்புக்குரிய பதில்கள் கிடைக்கும்.

‘டாப் 10 கிரிமினல்கள்’ என்ற ஆங்கிலத் தேடலில், பிரதமர் மோடியின் படங்கள் இடம்பெற்று ஏற்படுத்திய குழப்பங்கள், தவறான புரிதல்களுக்கு நாங்கள் மன்னிப்புக் கோருகிறோம். இது மாதிரியான எதிர்பாராத முடிவுகள் வருவதை தடுக்க நாங்கள் எங்கள் அல்காரிதம்களை மேம்படுத்த தொடர்ந்து முயன்று வருகிறோம்” என்று கூறியுள்ளார்.

மேலும் டாப் 10 கிரிமினல்கள்’ என்ற தேடலுக்கு விடையாக மோடியின் படம் கிடைக்க பிரிட்டிஷ் நாளிதழ் ஒன்று மோடியின் புகைப்படத்தையும் தவறான மெட்டா-டேட்டாவை பயன்படுத்தியதே காரணம் என கூறப்படுகிறது. அந்தப் பத்திரிகை, கிரிமினல் பின்னணி கொண்ட அரசியல்வாதிகள் குறித்த செய்திக் கட்டுரைகளில் பயன்படுத்தியிருந்த சில புகைப்படங்களும், குற்றப் பின்னணி கொண்ட அரசியல்வாதிகள் குறித்த மோடியின் பேச்சு தொடர்பான செய்திகளில் பயன்படுத்தப்பட்டிருந்த புகைப்படங்களுமே, கூகுள் தேடலில் பிரதிபலித்துள்ளது.

இந்திய பிரதமரின் புகைப்படம் டாப் 10 கிரிமினல்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளதால் சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பு ஏற்படுகிறது.

Leave a Reply